தமிழ்நாடுபொழுதுபோக்கு

மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்கும் சோற்றுக்கற்றாழை குழம்பு..

பெண்கள் மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்க சோற்றுக்கற்றாழையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோற்றுக்கற்றாழையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாழை – 3
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
சிறியவெங்காயம் – 10
வேர்க்கடலை – 1 ஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – கால் கப்
குழம்பு மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தக்காளி – ஒன்று
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

சோற்றுக்கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளலாம்.

புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் எடுத்து கொள்ளவும் அதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்குழம்பு நன்றாக கொதித்து வரும்போது நறுக்கிய சோற்றுக் கற்றாழையை சேர்த்துக் கொள்ளலாம். குழம்பு நன்றாக கொதிக்கும்போது தேங்காய் விழுதை சேர்க்கவும். பத்து நிமிடம் குழம்பு மூடி வைக்கவும் இப்போது குழம்பு நன்றாக கெட்டியாகவும் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடலாம்.

இப்போது மிகவும் சுவையான சோற்றுக்கற்றாழை குழம்பு தயாராகிவிட்டது..

Back to top button
error: Content is protected !!