தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, இலங்கையின் தமிழர்கள் முகாம்களில் 7,469 பழுதடைந்த வீடுகளை 231 கோடி ரூபாய் செலவில் கட்டி தரப்படும் என்றும், அதில் 5 கோடி குழந்தைகள் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை செயலாளர்கள் மற்றும் தமிழ் முகாம்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதை அரசு உறுதி செய்யும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க:  டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: