தமிழ்நாடு

‘கடந்த ஆண்டை போல அதிமுக உடன் கூட்டணி தொடரும்’ – ஜி.கே.வாசன் அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை போலவே இந்த ஆண்டும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து வேலைகளையும் தேர்தல் ஆணையும் மும்முரமாக செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்த தேர்தலில் புதிதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனும் போட்டியிடப்போகிறார். அவரும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

தற்போது தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பின் கூட்டணி பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக கட்சியுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக போன்ற காட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,” கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.ஏற்கனவே முதல்வர் வேட்ப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதை ஜி.கே.வாசன் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் வேறு ஒரு தனி சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!