தமிழ்நாடு

ஜூலை 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் அழைப்பு!!

தமிழக அரசு சார்பில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருகிற 12 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட 2014 ஆம் ஆண்டு திட்ட அறிக்கை தயார் செய்து 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த ஆணை கட்ட தமிழக அரசிடம் இருந்து பல எதிர்ப்புகள் வந்துள்ளது. காரணம் இந்த அணை கட்டப்பட்டால் பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாலைவனமாக கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டமானது வருகிற 12 ஆம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக சட்டபூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கர்நாடகா முதல்வர் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதிய போது இந்த அணை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அமையும் என்று திட்டவட்டமாக விளக்கி இந்த அணை அமைய தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என கடிதம் எழுதியுள்ளனர். இருந்த போதிலும் மேகதாது நலனை ஒருமித்த அணை காப்பகத்தில் எண்ணங்களை பிரச்சனை குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை அனைத்து கட்சியினருக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: