ஆரோக்கியம்

உணவை வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம்! கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..!

நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

நம்மில் சிலர் நேரம் போய்விட்டது என்று நினைத்து அவசர அவசரமாக சாப்பிடுவது வழக்கம். உண்மையில் அப்படி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.

அந்தவகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். விரைவாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்த உதவும் குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வந்தது. குறிப்பாக வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் இந்த இலையைப் பற்றி தெரியுமா? இனி தெரிஞ்சா விடமாட்டிங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: