விளையாட்டு

அஜித் ரசிகர்கள் வேற லெவல்.. வலிமை என்றால் என்ன? அஸ்வினிடம் சந்தேகம் கேட்ட அலி பாய்..

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இதில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி பீல்டிங் செய்த போது அவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அஸ்வின் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், ’நான் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது திடீரென ரசிகர்கள் சத்தமாக வலிமை அப்டேட் குறித்து கேட்டனர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. போட்டிக்கு இடையில் இப்படி கேட்டதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின் கூகுள் செய்து பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டியின் போது கேட்டதால் என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை.

மறுநாள் மொயின் அலி என்னிடம் வந்த வலிமை என்றால் என்ன என்று கேட்டார். அவரிடமும் இதேபோல் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டுள்ளனர். அஜித் ரசிகர்கள் உண்மையில் கலக்கிட்டாங்க. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டதெல்லாம் வேற லெவல். இதை என்னால் நம்பவே முடியவில்லை. தமிழர்களின் சினிமா ஆர்வத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு” என்று அஸ்வின் தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!