தமிழ்நாடுமாவட்டம்

ஜன.17ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு நடத்த அனுமதி வழங்கியது. ஆனாலும் சில கட்டுப்பாடுகளுடன் நடந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்த இருந்த நிலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக தேதி மாற்றம் செய்து ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: