தமிழ்நாடுமாவட்டம்

உதயநிதியின் டூர் அவசரத்திற்கு காரணம் அழகிரி தான்..

கடந்த தேர்தலில் திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் நமக்கு நாமே என்கிற பெயரில் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் குன்றி இருந்த சமயத்தில் OMGயின் சுனில் தரப்பினர் வடிவமைத்து கொடுத்த நமக்கு நாமே பிரச்சார பயணம் திமுகவிற்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.

அதேப்போன்ற 100 நாள் பிரச்சாரத்தை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி இன்று கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் துவக்குகிறார். நமக்கு நாமே ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரச்சார திட்டத்திற்காக கடந்த ஒரு மாதகாலமாக ஐபேக் நிர்வாகிகள் தமிழக முழுவதிலும் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பல்வேறு தரப்பினர் தயார் செய்து வைத்திருக்கின்றனர்.

உதயநிதியின் இந்த பிரச்சார திட்டம் டிசம்பர் முதல்வாரத்தில் துவக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.. ஆனால் திடீரென இன்று அவசர அவசரமாக துவங்கப்படுவதற்கு காரணம் அழகிரி என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.. அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்து மு க அழகிரி இன்று மதுரையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அழகிரியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் உதயநிதியின் பயணம் இருக்க வேண்டும் என ஸ்டாலின் குடும்பத்தினர் நினைத்ததன் விளைவாகவே இன்று திருக்குவளையில் உதயநிதியின் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்கின்றனர் அறிவாலயத்தினர்.

loading...
Back to top button
error: Content is protected !!