இந்தியாதொழில்நுட்பம்

5ஜி சேவை சோதனையில் வெற்றி பெற்ற ஏர்டெல்..!

5G இணைய சேவை சோதனையில் வெற்றி பெற்று நாட்டில் முதன் முதலில் 5G சேவையை அளிக்க தயாராக உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக பல ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். 5G சேவை பரிசோதனையின்போது பயனர்கள் ஒரு முழு நீள திரைப்படத்தை சில விநாடிகளில் டவுண்லோட் செய்துக் கொள்ளலாம். இதையடுத்து தற்போது இந்தியாவில் 5G இணைய சேவையை கொண்டு வருவதற்கான சோதனைகளில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக ஜியோ நிறுவனம் 2021ன் பிற்பகுதியில் 5G சேவை இந்தியாவில் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் 5G இணைய சேவையை ஹைதராபாத்தில் பரிசோதித்து அதில் வெற்றி கண்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் முதன் முதலில் 5G சேவையை அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அத்துடன் தொலைத்தொடர்பு துறையின் அனுமதி கிடைத்தபின் உடனடியாக 5G சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் மிட்டல்,”இதற்காக அயராது பாடுபட்ட எங்களது பொறியாளர் குழுவுக்கு வாழ்த்துகள். டெக் சிட்டியான ஹைதராபாத்தில் இந்த சேவையை டெமோ செய்ததில் மகிழ்ச்சி. புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் ஏர்டெல் தான் முன்னோடி என்பதையும் நிரூபித்துள்ளோம்” என தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!