தமிழ்நாடு

அதிமுக பாஜக கூட்டணி ஒரு போதும் பிரியாது – மோடி மீது நம்பிக்கை இருக்கிறது ஒபிஎஸ் அறிவிப்பு!!

அதிமுக கட்சிக்குள் கட்சி மோதல் மற்றும் சின்னம்மா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற போவதாக பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அதிமுகாவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் அதிமுக பாஜக கூட்டணி எப்பொழுதும் முறியாது என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வியை கண்டது. பின் கட்சியை சசிகலா கைப்பற்றப்போவதாக சில தகவல்கள் வந்தன. அதற்க்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். பின் இந்தமுறை அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் ஆனால் ஆட்சியை பிடிக்காததற்கு காரணம் பாஜகவுடன் வைத்த கூட்டணிதான் காரணம் என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நடந்த நிர்வாக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இதை கேட்ட பாஜக மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் சண்முகத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2021 தேர்தாளில் பாஜக தோற்றதற்கு கரணம் அதிமுக தான் என்று கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி ஒபிஎஸ் அறிக்கை..
இவர்களின் இந்த பேச்சுகளுக்கு இடையில் ஒரு சிலர் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றுவிட்டனர் நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி இருக்குமா என்று கேட்டனர் சிலர். அதிமுக பாஜக கட்சியின் கூட்டணி மற்றும் தேர்தலை தோல்விகளை எழுந்த பேச்சுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்க்காக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும், இரு கட்சிகளுக்கும் ஒருபோதும் பிளவு ஏற்படாது, அதுமட்டுமில்லாமல் தமிழக நலன் கருதியும் நம் இந்திய நாட்டின் நலன் கருதியும் பாரத பிரதமர் மோடி மீது உள்ள அன்பினாலும் பாஜக அதிமுக கூட்டணி என்றும் எப்பொழுதும் தொடரும். அதிமுக மற்றும் கட்சியினர் பிரதமர் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் எனவே நாங்கள் பிரியவாய்ப்பில்லை என்று அறிக்கையில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: