ஆரோக்கியம்

உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு!

ஒரு வேலையை செய்யும்போது, நாம் சுறுசுறுப்பாக இருந்தால், அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் விரைவில் முடிந்து விடும். அது எதனால் சாத்தியமாகிறது என்று பார்த்தால், உடலில் ஏற்படும் சுறுசுறுப்பு நமக்குள் ஒருவித சக்தியை உருவாக்குகிறது. அதனால், எடுக்கும் காரியத்தில் வெற்றியை அடைய முடிகிறது. ஆனால், அதுவே சுறுசுறுப்பின்றி, சோர்வுடன் ஒரு வேலையை தொடங்கும்போது, ஒரு நாளில் முடிய வேண்டிய வேலை நாள்கணக்கில் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், சுறுசுறுப்பானது செயலுக்கு மட்டுமன்றி, நமது ஆயுளுக்கும் துணை புரிவது பலருக்கும் தெரியவராது. அதையடுத்து, சுறுசுறுப்புக்கும், ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பார்க்கலாம்.

ஆய்வு

சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும், சோம்பலாக இருப்பவர்களுக்கும் யாருக்கு ஆயுள் அதிகம் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையறைக்கு செல்லும் வரை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது பற்றிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், சுறுசுறுப்பாக செயல்படுபவர்களுக்கு தான் ஆயுள் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது.

சோம்பேறிகளாக இருப்பவர்களைக் காட்டிலும், சுறுசுறுப்பாக இருப்பவர்கள் 4 ஆண்டுகள் அதிகம் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் சுறுசுறுப்பாக இருப்பவர்களின் ஆயுள் ரகசியம் எது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரகசியம்

அந்த ரகசியம் உடற்பயிற்சிதான்.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். எடுத்தவுடன் மணிக்கணக்கில் செய்ய முயற்சிக்க வேண்டாம். முதலில் 5 நிமிடங்கள் செய்த பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள்.

எனவே, உங்கள் ஆயுளை அதிகரிக்க உங்களால் முடிந்த உடற்பயிற்சியை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

என்ன பயிற்சி

உடற்பயிற்சி என்பதில் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் செய்வது, நீச்சல் அடிப்பது போன்றவை கூட அடங்கும்.

எந்த பயிற்சியாக இருந்தாலும் குறைந்த பட்சம் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்துக்கொள்வது சிறந்தது.

உடற்பயிற்சியை பொதுவாக காலை அல்லது மாலை வைத்துக்கொள்வது நல்லது.

பலன்கள்

தினமும் உடற்பயிற்சி செய்வதால் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருகிறது. அதன் காரணமாக, மூளைக்கு, இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரித்து சுறுசுறுப்பு கிடைப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமும் உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதும் தடுக்கப்படுவது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  மஞ்சளை அதிகளவில் சேர்த்து கொள்வது இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: