உலகம்

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் – அதிகாரபூர்வ தகவல்!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பியோடி விட்டதாக செய்திகள் வந்த நிலையில், அவர் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக போர் நடந்ததில் இருந்து அமெரிக்க போர் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் சற்று குறைந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றத்தில் இருந்து அமெரிக்க வீரர்களை ஆப்கானில் இருந்து படிப்படியாக வெளியேற்றி வருகிறார். இந்த மாத இறுதிக்குள் அனைத்து வீரர்களும் முழுவதுமாக நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனால் தலிபான்கள் படை ஒரே வாரத்தில் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது இதனால் நாட்டு மக்கள் பயந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது விமானம் தரையிறங்க தஜிகிஸ்தானில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஓமனுக்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மை நிலவரம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இ ந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை அனுமதிப்பாக ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  ஆப்கானிஸ்தான் விவகாரம்; ஐநா சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: