தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு முன்பணம் – முழு விவரங்கள் வெளியீடு!!!

தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் புது வீடு கட்டுவதற்கோ, ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமான வாங்க வேண்டும் என்றாலோ அதற்கு முன்பணம் கொடுக்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட உதவி புரியும் விதத்தில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசுத் துறை பணியாளர்கள் வீடு கட்டுவதற்கும், கட்டிய வீட்டை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பினை சொந்தமாக்கி கொள்வதற்கும் முன்பணம் கொடுக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று (செப்டம்பர் 1) சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘அரசுப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகும். அந்த கனவை நனவாக்கும் விதத்தில் அரசு ஊழியர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் கீழ் வீடு கட்ட விரும்பும் ஊழியர்களுக்கும், கட்டிய வீடுகளை வாங்க விரும்பும் பணியாளர்களுக்கும் வீடு கட்டும் முன்பணத்தினை அரசு வழங்க உள்ளது. இந்த முன்பணமாது அனைத்து மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களது ஊதிய அளவின் முறையே ரூ. 60 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் வரை கொடுக்கப்பட இருக்கிறது.

இப்பணத்தில் 50% வீட்டு மனை வாங்குவதற்கும், மற்ற 50% வீடு கட்டுவதற்கும் வழங்கப்படும். இச்சலுகை பணி மற்றும் நுழைவுப் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களுக்கானதாகும். அரசு ஊழியர்களுக்கான இந்த கடன் சேவைகள் மத்திய அரசு பணியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வரை இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வீடு கட்டுவதற்காக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளவர்கள், அதை அரசின் முன் பணமாகவும் மாற்றிக் கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு வழங்கும் முன் பணத்தொகை, முதலில் 180 தவணைகளாக அசல் தொகை பிடித்தம் செய்யப்படும். பின்னர் 60 தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை பெற்றுள்ள அரசு ஊழியர் பணியின் போது இறக்க நேரிட்டால், ‘அரசுப் பணியாளர் வீடு கட்டும் முன்பண சிறப்பு குடும்ப சேமநல நிதித் திட்டம்’ என்பதன் கீழ் ஊழியரின் ஊதியத்தில் இருந்து, மாத தவணைத் தொகையில் 1% பிடித்தம் செய்யப்படும். இதற்காக ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தலைமைச் செயலகத்தின் துறைகளுக்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: