தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை – மாவட்ட ஆட்சியர் தகவல்!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியார் ஸ்ரேயா சிங் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையானது 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம். தற்போதுள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 109 சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1,803 இடங்களும், 57 சிறுபான்மையற்ற நர்சரி பள்ளிகளில் 724 இடங்கள் என மொத்தமாக 2,527 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் இருந்து புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை செலுத்தும் போது மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், புகைப்படம், பெற்றோரின் வருமான சான்றிதழ் உள்ளிட்டவை முக்கியமாக தேவைப்படும் ஆவணங்களாகும். தவிர மாற்று சான்றிதழ் இல்லாமலும் புதிய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: