தமிழ்நாடு

ஆகஸ்ட் 31 வரை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!!!

தமிழகத்தில் 5 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்து கொண்டிருக்க கூடிய சூழலில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக மீண்டுமாக திறக்கப்பட உள்ளது.

தொடர்ந்து கல்லூரிகளிலும் செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதே சமயம் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்களும் கடந்த ஜூலை மாதம் முதல் துவங்கியது.

அந்த வரிசையில் தற்போது 5 ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த சட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: