தமிழ்நாடு

கோவை வழியாக கூடுதல் சபரிமலை சிறப்பு ரயில் அறிவிப்பு!

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சேலம், கோவை வழித்தடத்தில் வரும் 18ம் தேதி முதல் கூடுதலாகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி செகந்திராபாத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி காலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07133) மறுநாள் மதியம் 1.50 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07134) 21-ந் தேதி காலை 3.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா நிலையத்தில் இருந்து 22-ந் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07135) மறுநாள் மதியம் 1.50 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07136) 25-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு காச்சிகுடா செல்லும்.

மராட்டிய மாநிலம், நண்டேடு நிலையத்தில் இருந்து 23-ந் தேதி, காலை 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07137) மறுநாள் இரவு 7.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 21-ந் தேதி மதியம் 2.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07117) மறுநாள் இரவு 9.40 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்திற்கு செல்லும்.

அதேபோல் கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:07118) 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஐதராபாத் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

25-ந் தேதி கொல்லத்தில் இருந்து இரவு 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த சபரிமலை சிறப்பு ரெயில்கள், காயன்குளம், மாவேளிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்ட உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: