வேலைவாய்ப்பு

ஆதார் துறை வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Deputy Manager (Legal & Policy) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Deputy Manager (Legal & Policy)
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 09.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Deputy Manager (Legal & Policy) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு/ பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

​தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – http://careers.nisg.org/job-listings-deputy-manager-legal-policy-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-8-to-13-years-200721001924

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: