“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் நடிகை – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி தற்போது தான் நடித்து வந்த “பாரதி கண்ணம்மா” தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை மரணம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளியான சித்ரா நடித்து வந்தார். ஆனால், கடந்த மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தினை அவரது ரசிகர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இதனை அடுத்து அவரது முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது.
விஜய் டிவியில் அதிக அளவில் மக்களை கவர்ந்துள்ள மற்றொரு சீரியல் என்று சொன்னால் அது “பாரதி கண்ணம்மா” இந்த நாடகத்தில் கதாநாயகன் பாரதிக்கு தங்கையாக நடிகை காவியா அறிவுமணி நடித்தார். அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படியான நிலையில் அவரை “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தனர்.
அவர் முதலில் தயங்கினாலும், பின் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். ஆரம்பத்தில் அவரால் சித்ரா அளவிற்கு நடிக்க முடியவில்லை என்றாலும், பின் பழகபழக நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அவரது நடிப்பினை ரசிகர்களும் ஏற்று கொண்டனர்.
இதனை அடுத்து தான் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த தங்கை கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். காவியா இந்த சீரியலில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.