சினிமாதமிழ்நாடு

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமான்ய மக்கள் திரையுல பிரபலங்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக வடிவேலு, அருண் விஜய், சத்யராஜ், மீனா என பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் சிரிய அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது அதிவேகமாக நோய் தொற்று பரவி வருகிறது என்பதற்கான அச்சப்படுத்தும் விஷயம். தயவு செய்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஒருவேலை நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உங்கள் அன்புக்குறியவர்களுக்காகவும் நோய் தொற்றின் குறைந்த வீரியத்திற்காகவும் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: