சினிமாதமிழ்நாடு

நடிகர் விவேக் காலமானார்..

நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

சின்னக் கலைவாணர் எனப் போற்றப்படும் ஜனங்களின் கலைஞன் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவரது இறப்புக்கு தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  டிப்ளோமா முடித்தவர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: