சினிமாதமிழ்நாடு

நடிகர் விவேக் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்..!

நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவேக் மரணத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

11433652 rajini

அதில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாள்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்கள். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: