சினிமா

பீஸ்ட் நடிகையுடன் டூயட் பாடுகிறாரா நடிகர் தனுஷ்? விரைவில் அப்டேட்

நடிகர் தனுஷ் தமிழில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தல் டி43 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளது படக்குழு.

ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு தனுஷின் இந்த படம் வெளியாகும் என்று எதர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறுப்பட்டுள்ளது. இதனிடையே தெலுங்கில் முதல்முறையாக சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள நாயகி மற்றும் படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தனுஷிற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தனுஷிற்கு அந்த படத்தில் பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவிடம் தற்போது பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் தற்போது பிரபாசுடன் ராதே ஷ்யாம் மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முகமூடி மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்துவரும் இவரது மார்க்கெட் ரேட் மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திலும் இவருக்கு மிகவும் அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: