தமிழ்நாடு

‘ஆபாச பேட்டிகளை யூடியூபில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் பெண்களை வைத்து ஆபாசமாக பேட்டி எடுத்ததாக கூறி மூவர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இனிமேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறை எச்சரிக்கை

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் சாஸ்திரி நகரை சேர்ந்த காவல் துறையினரிடம், பொது இடங்களில் ஆபாசமாக பேட்டி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். சென்னை டாக் என்ற யூடியூப் சேனல் பெண்களை வைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து அதை சமூகவலைதலங்களில் பதிவிட்டதற்காக அந்த சேனலில் பணிபுரியும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

355167ag youtube

புகார் தொடர்பாக சென்னை டாக் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோர் சாஸ்திரி நகர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் இது தொடர்பாக கூறும் போது, ‘யூடியூப் சேனல்களில் அருவருக்கத்தக்க விதத்தில் ஆபாசமான கருத்துக்களுடைய வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!