சினிமாஇந்தியா

குடியிருப்பு பகுதியை உணவகமாக மாற்றிய குற்றசாட்டு – நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு

மும்பையில் ஜூவு பகுதியில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டடத்தை முறையான அனுமதியின்றி உணவகமாக மாற்றியதாக கூறி மும்பை நகர காவல் துறை நடிகர் சோனு சூட் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

காவல்துறை வழக்கு

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு நபர் சோனு சூட். திரைப்பட நடிகராக இருந்தாலும் தொற்று நோய் காலத்தில் இன்னல்களில் இருந்த மக்களுக்கு எதிர்பாராதவிதமாக பல உதவிகளை செய்து அசத்தி வந்தவர் இவர். சமூக வலைத்தளங்களில் உண்மையான ஹீரோ என்று பலராலும் பாராட்டப்பட்டவர்.

Sonu Sood Facebook 770x433 1

தற்போது மும்பையிலுள்ள ஜூவு பகுதியில் உள்ள ஆறுமாடி குடியிருப்பு பகுதியை எந்தவொரு முறையான அனுமதி இல்லாமல் மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் மும்பை நகர போலீசார் சோனு சூட் மற்றும் அவர் மனைவி மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிர்ஹான் மும்பை நகராட்சி சார்பில் அக்டோபர் 27 ம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டது. அறிக்கை அளித்து 30 நாட்கள் வரை சோனு சூட் எந்த தகவலும் அளிக்காததால் அதிகாரிகள் நேரடியாக அந்த பகுதியை ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதியை உணவகமாக மாற்றியிருந்ததை கண்டறிந்த போலீசார் ஜூவு காவல் நிலையத்தில் எழுத்து வடிவில் புகார் அளித்தனர். மேலும் புகார் தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Back to top button
error: Content is protected !!