தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் வருகிற 14,15ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain5 1590391899

குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

rain01

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 14,15ஆகிய தேதிகளில் நீலகிரி,தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

tnrain191119

எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (03.04.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: