இந்தியா

நாடு முழுவதும் 11 கோடியே 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

தடுப்பூசி முகாம்கள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியிருக்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் 31 லட்சத்து 39 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டிவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பாதிப்பு அதிகமுடைய மூன்று மாநிலங்களில் மட்டும் ஒருகோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே முதல் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும் விஜயவாடாவில் பெருந்திரளாக பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இதையும் படிங்க:  "தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசி தேவை".. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: