தமிழ்நாடுமாவட்டம்

வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..!

தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அவை இன்று முதல் அமலுக்கு வந்தது

அந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

*45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

*இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

* ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதி.

* ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.

* உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி

* உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11-00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

* தமிழகத்தில் திருவிழா மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை.

* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம்.

* திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

* உள் கூட்டங்கள் 200 பேர் மட்டுமே அனுமதி.

* கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி.

* அரசு தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, பேருந்துகளில் சீட்டில் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி.

*கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை.

*மாவட்டச் சந்தைகளிலும் சில்லறை விற்பனைக்கு தடை.

* படப்பிடிப்பில் கலந்துக்கொள்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

*நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி.

* முகக்கவசம், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை அனுமதிக்க வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு உத்தரவு.

* சுற்றுலா தலங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி.

*வெளி நாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ.பாஸ் கட்டாயம்.

* தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களுக்கு தடுப்பூசி போடப்படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: