இந்தியா

புதுச்சேரியில் முன்விரோதத்தால் கடத்தப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை..!

புதுச்சேரி அருகே, முன்விரோதம் காரணமாக, இளைஞர் கடத்தப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அய்யன்குட்டிப்பாளையம் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த பிரகாஷ் என்ற இளைஞரை, நேற்றிரவு, மர்ம கும்பல், கடத்திச் சென்றது. இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அரசூர் அருகேயுள்ள காலி மனையில், பிரகாஷ், சடலமாகக் கிடந்துள்ளார். விசாரணையில், முன்விரோதம் காரணமாக, சபரி, ராஜா உள்ளிட்ட 4 பேர், பிரகாஷை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதில், சபரி, ராஜா ஆகியோரைக் கைது செய்துள்ள போலீசார், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

loading...
Back to top button
error: Content is protected !!