வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும் நல்ல படியாக நடந்தேறவும், இவர்களை வழிபடுங்கள் போதும். அந்த, ‘இவர்கள் யார்?’ வாருங்கள் அது பற்றி அறிந்து கொள்ள கட்டுரைக்குள் செல்வோம்.
இந்தப் பூமியில், அதாவது நமது இல்லத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அண்ட வெளியில் நமது பூமி பாதுகாப்பாக இருக்கிறதா?
- Advertisement -
விஞ்ஞானம் சொல்கிறது வான் மண்டலத்தில் பூமியை விடப் பெரிய விண் கற்கள் எல்லாம் அவ்வப்போது காணப்படுகிறது என்று. ஒரு நிமிடத்திற்கு பூமியில் 6000 விண்கற்கள் விழுகிறதாம். அதில் பெரும்பாலான விண் கற்களை சமுத்திரம் வாங்கிக் கொள்கிறது. எஞ்சிய விண் கற்கள் பூமியில் வந்து விழும் வேகத்தில் உராய்வினால் சாம்பல் ஆவதும் உண்டு.
இதை விட ஆச்சர்யம், எல்லா கிரகங்களும் யாரோ சொல்லி வைத்தார் போல தன்தன் பாதையில் சூரியனைச் சுற்றி சுழல்கிறது. இதெல்லாம் எப்படி நடக்கிறது?. கண்டிப்பாக இறைவன் இருப்பதால் தானே!
- Advertisement -
அந்த இறைவனுக்கு உதவவும், பூமியைக் காக்கவும், இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் தான் அஷ்டதிக் பாலகர்கள். அவர்கள் இந்தப் பூமியை எட்டு திசையில் இருந்தும் பாதுகாத்து, நம் செயல்களை எல்லாம் கண்காணித்து வருவதாக வேதங்கள் சொல்கிறது. இவர்களை வழிபட நிச்சயம் வாழ்க்கையில் வளம் சேரும். நலம் பெருகும். இன்னல்கள் நீங்கி சுகம் கிடைக்கும்.
‘அஷ்டம்’ என்றால் ‘எட்டு’, ‘திக்’ என்றால் ‘திசை’, ‘பாலகர்கள்’ என்றால் ‘காப்பவர்கள்’ என்பது பொருளாகும். இதன் பொருள் எட்டுத் திசை காவலர்கள் அல்லது எண்திசை நாயகர்கள் என்பதாகும். இந்த எட்டு பேர் தான் பூமியில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு சாட்சியாக இருக்கிறார்கள். ஆகாயத்தில் ஏற்படும் தீய விளைவுகள் பூமியை தாக்காதவாறு காக்கின்றனர். ரக்ஷிக்கின்றனர்.
அந்த வகையில், இந்திரன், அக்னி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய இவர்களைத் தான் நாம் அஷ்டதிக் பாலகர்கள் என்கிறோம். இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. இவர்களை பற்றி சற்று சுருக்கமாகக் காணலாம்.
முதலில் இந்திரன்: இவரே அஷ்ட திக் பாலகர்களின் தலைவர். இவர் கிழக்கை ஆள்பவர். வெள்ளை யானை தான் இவரது வாகனம். ‘வஜ்ரம்’ என்னும் ஆயுதத்தை இவர் தாங்கி இருப்பார். இவரை வேதங்கள், தேவர்களின் தலைவர் என்றும் சித்தரித்துக் கூறுகிறது. இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும் பெறலாம். அதாவது பூமியிலேயே சொர்க்கத்தைக் காணலாம். அப்படிப் பட்ட இந்த இந்திர பகவானின் தியான ஸ்லோகமானது பின்வருமாறு.
“ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ இந்திரப் ப்ரசோதயாத்.”
மேற்கண்ட இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும். தனுசு மற்றும் மீன ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்ல நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
அஷ்டதிக் பாலகர்களில், இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் அக்னி பகவான் ஆவார். இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. யாகத்தின் சமயத்தில் தீயில் போடப்படும் நிவேதனப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக புராணங்களில் ஒரு நம்பிக்கை உண்டு.
இவருடைய துணைவியார் ‘ஸ்வாஹா தேவி’. ஆட்டுகிடா வாகனத்தின் மீது இவர் அமர்பவர். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு, பலம், மன அமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும். இவருடைய கீழ்கண்ட தியான ஸ்லோகத்தை தினமும் கூறி வந்தால். நெருப்பின் மூலமாக இழப்புகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாது. அத்துடன் ஒளி மிகுந்த அழகைப் பெறுவார்கள். இப்படிப் பட்ட அக்னி தேவனின் தியான சுலோகம் பின்வருமாறு.
“ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும் I
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸநம் I”
அஷ்டதிக் பாலகர்களில், மூன்றாவது இடத்தைப் பிடிப்பவர் ‘யமன்’ ஆவார். வேதங்கள் இவரைத் தெற்குத் திசையின் காவலர் என்று போற்றுகிறது. இவரை எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என்றும் பல பெயர்களில் அழைக்கிறது. இவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை ஆவாள். இவளே பாரத தேசத்தில் நதியாகப் பாய்கிறாள் என்பது இன்னொரு கூடுதல் தகவல். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீங்கும். தரும சிந்தனைகள் தோன்றும். நோய்கள் அகன்று, ஆயுள் சித்திக்கும். இப்படிப் பட்ட இந்த யமனின் தியான ஸ்லோகம் பின்வருமாறு..
“க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம் I
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் II”
அஷ்டதிக் பாலகர்களில், நான்காவது இடத்தைப் பிடிப்பவர் ‘நிர்ருதி’ ஆவார். எதிரிகள் பயம் நீங்க! வழக்குகள் சாதகம் ஆக! கடன் தொல்லை அகல! இவரை வணங்கினாலே போதும். இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் ‘கட்கி’ ஆவார். இவருடைய ஆயுதம் ‘கட்கம்’ என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும். இறந்த பிணத்தின் மீது அமர்ந்து இருப்பதாக ஸ்லோகங்கள் இவரைப் பற்றி வர்ணிக்கிறது. இவரது தியான ஸ்லோகத்த்தை கீழே பார்ப்போம்.
“ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம் I
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் II”
அஷ்டதிக் பாலகர்களில், ஐந்தாவது இடத்தைப் பிடிப்பவர் ‘வருணன்’ ஆவார். இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.
ஐவகை நிலங்களில் ஒன்றான ‘நெய்தல்’ நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருடைய துணைவியார் ‘வாருணி’ எனப்படுவார். இவருடைய வாகனம் ‘மகரம்’ என்ற மீன் ஆகும். இவர் ‘வருணாஸ்திரம்’ என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவுப் பஞ்சம் தீரும். இவரை முறைப்படி வழிபட்டு வர வீடுகளில் கூட தண்ணீர் பிரச்சனை படிப்படியாகக் குறையும் என்பது ஒரு ஐதீகம். இவரது தியான சுலோகம் பின்வருமாறு.
“நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம் I
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம் II”
அஷ்டதிக் பாலகர்களில், ஆறாவது இடத்தைப் பிடிப்பவர் ‘வாயு தேவன்’ ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்பது புராணங்களின் மூலமாக அறியப்படுகிறது. இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார்.
இவருடைய வாகனம் ‘மான்’ ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி ஏற்படும். அனுமானின் பரிபூரண அருள் கிடைக்கும். இவரது தியான ஸ்லோகத்தை கீழே காணலாம். இதனை முறைப்படி சொல்லி வர சகல விதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.
“ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம் I
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம் II”
“குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம் I
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத் II”
அஷ்டதிக் பாலகர்களில், எட்டாவது இடத்தைப் பிடிப்பவர் ‘ஈசானன்’ ஆவார். இவர் ஈசனின் ரூபம். அதனாலேயே மங்கள ரூபம் எனப் போற்றப்படுகிறார். அதாவது, சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவரின் துணைவியார் ‘ஈசானய ஜாயை’ ஆவார்.
இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் சித்திக்கும். அதாவது உலக வாழ்வின் மெய்ப்பொருள் கிடைக்கப்பெறும். கீழ்கண்ட தியான ஸ்லோகத்தை சொல்லி இவரை வழிபடுவது மிகச் சிறப்பு. அந்த தியான சுலோகம் பின்வருமாறு.
“ஈஸாநம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம் I
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம் II”
நாமும் கூட மேற்கண்ட இந்த அஷ்ட திக் பாலகர்களை மேற்கண்ட தியான மந்திரங்களை உச்சரித்தபடி வணங்குவோம். வாழ்வில் ஜாதக தோஷங்கள் தீர்ந்து நலம் பெறுவோம். பயன் அடைவோம்.