வாழ்க்கையில் இன்று முன்னேறி இருக்கின்ற பல பேர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழித்தவர்கள். இன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிப்பவர்கள், நாளை நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியாளர்களாக வருவார்கள்.
நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு கிடையாது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எது செய்தாலும் அது நமக்கு வெற்றியைத் தான் கொடுக்கும்.
அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் இருக்கக்கூடிய நேரமே பிரம்ம முகூர்த்த நேரமாகும். நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
பொதுவாக தீப வழிபாடு என்றாலே அதில் நல்லெண்ணெய் தீப வழிபாடு மிக மிகச் சிறந்தது.
உங்களுடைய வீட்டில் அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும், காரிய சித்தியும் தேவையென்றால் தினம்தோறும் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபடவும். இறைவனிடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.