கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் நிற்பதை பாரத்திருப்போம். ஆனால் அவற்றை பற்றி நாம் தெரிந்து இருக்க மாட்டோம். அவர்கள் யார் என இந்த பதிவில் பார்ப்போம்.
அவர்கள் துவாரபாலகர். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.
- Advertisement -
வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபாகும்.