நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும். நாம் எந்த காரியத்தை எண்ணி விளக்கு ஏற்றுக்கிறோமோ அந்தக் நல்ல காரியம் சீக்கிரம் கைக்கூடிவரும்.
- நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்.
- தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றினால் வசீகரம் ஏற்படும்.
- விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.
- இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அனைத்து விதமான காரியத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும்.
- வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும்.
- இந்த ஐந்து எண்ணெயையும் பஞ்ச கூட்டு எண்ணெய் என்று சொல்கிறோம். இந்த ஐந்தையும் சேர்த்து விளக்கேற்றினால் இறைவன் அருளும், குலதெய்வத்தின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
- கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது முற்றிலும் தவறு.