.jpeg

சகல செல்வமும் தரும் துளசி வழிபாடு..!

இந்து சமயத்தில் துளசி என்ற தாவரம் புனிதமானதாக நம்பப்படுகின்றது. இந்துக்கள் துளசியை பூமிக்குரிய வெளிப்பாடு எனக் கருதுகின்றனர். திருமாலை இடைவிடாது துதித்துக் கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியின் கண்ணுள்ள துளசிச் செடியாகும். திருமாலின் வெவ்வேறு அவதாரங்களான கிருட்டிணன், விட்டலர் வணக்கங்களின் போது துளசியின் இலை கொண்டு வழிபடுவார்.

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. அதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் எனப்படும்.இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம்.

தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று ‘துளசி’. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் ‘துளசி’ என்று பெயர். துளசிக்கு ‘விஷ்ணுப்பிரியா’ என்ற பெயரும் உள்ளது.

ஒரு வீட்டில் துளசி இருந்தால் அங்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. துளசி மாடம் கட்டி வழிபட தென்மேற்கு மூலையும்,வடகிழக்கு திசையும் சிறந்தது.எனவே வீட்டு முற்றத்தில் துளசி மாடம் அமைத்து, அதில் துளசிச் செடியையும், அதனுடன் தொட்டாற் சிணுங்கி செடியையும் சேர்த்து நட்டு நன்னீர்விட்டு வளர்க்க வேண்டும்.நம் நோக்கம் நிறைவேற துளசி மாடத்தை இருபத்தொரு முறை வலம் வந்து வணங்கினால் பலன் யாவும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் துளசி பூஜை செய்ய, மாடம் அமைத்து அதில் துளசியை நட்டு மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டும்.ஒரு வளர்பிறை சுபநாளில் பூஜையை தொடங்க வேண்டும். தினமும் காலையில்,மாடத்தில் சந்தனம் இட்டு பால்,கல்கண்டு நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.மேலும் வெள்ளிக்கிழமை சுக்ரஹோரை நேரத்தில் கும்பிட லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது. துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்ல கூடாது.ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும். துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது..

‘பிரசீத துளசி தேவி

பிரசீத ஹரி வல்லபே

க்ஷீ ரோதமத நோத்புதே

துளசி த்வாம் நமாம்யகம்’

என்று மந்திரம் சொல்ல வேண்டும்.

துளசிப்பூ பறிக்கும் போது,

‘துளஸ்வமுத சம்பூதா

சதா த்வம் கேசவப்ரியே

கேச வார்த்தம் லுணமி த்வாம்

வரதா பவ சோபனே’

மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கவும், பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது.

வேர்ப்பகுதியில் சகல புண்ணிய நதிகளும் வாசம் செய்வதும், நடுப்பகுதியில் எல்லா தெய்வங்களும் உறைவதும், வேதங்கள் நான்கினையும் உச்சிப் பகுதியில் கொண்டதுமான புனிதம் நிரம்பிய துளசிச் செடியினை வணங்குகின்றேன் என்ற துதியைச் சொல்லி துளசியை வழிபாடு செய்து வந்தால் அது நமக்கு சகல செல்வமும் தரும் என்பது பரிபூரண நம்பிக்கை.