இன்றைய நாள் (செப்டம்பர் 29, 2023): சோபகிருது – புரட்டாசி 12 – வெள்ளி – வளர்பிறை
நல்ல நேரம்
காலை: 9.15-10.15 AM
மாலை: 4.45-5.45 PM
கௌரி நல்ல நேரம்
காலை: 1.45-2.45 AM
மாலை: 6.30-7.30 PM
நட்சத்திரம்
இன்று அதிகாலை 02.50 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ஆயில்யம், மகம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
சிம்மம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் புதிய புரிதல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் காலதாமதமாக முடியும். சக ஊழியர்களிடத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். தெளிவு பிறக்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செயல்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.
கடகம்
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆதரவுகள் மேம்படும் நாள்.
சிம்மம்
எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமையைக் கையாளவும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பொறுமை வேண்டிய நாள்.
கன்னி
முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சுபச்செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும். மாற்றமான நாள்.
துலாம்
வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளால் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாகும். லாபம் மேம்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மேல்நிலைக் கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
தனுசு
எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். திருப்தியற்ற மனநிலை குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வசதிகள் நிறைந்த நாள்.
மகரம்
புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சோர்வு குறையும் நாள்.
கும்பம்
வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தவறிய சில வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விவேகம் வேண்டும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.
மீனம்
மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.