Thursday, December 7, 2023
Homeஆன்மீகம்திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்!!
- Advertisment -

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்!!

- Advertisement -

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = five

- Advertisment -

Recent Posts

error: