ஆன்மீகம்

மனதிலிருக்கும் கவலை, பயத்தை போக்கும் சாய்பாபா மந்திரம்!

தினமும் சாய்பாபா மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட்டால் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மனக்கவலைகளை போக்கும் சாய்பாபா மந்திரம் ஒருவரின் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் நீங்கீவிடும்.

மந்திரம்:

‘ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ’

இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி ‘ஸ்ரீ சாய் பாபாவை’ மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும்.

வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால் அந்த படத்திற்கு முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடமுடியும்.

உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி உங்கள் மனம் சாந்தமடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!