எண்ணெய் தேய்த்துக் குளிக்க நாள் கிழமை பார்க்கப்பட வேண்டுமா? என்று பலர் கேட்கலாம். அதற்கான பதிலை நமது முன்னோர்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன.
பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் கட்டாயம் எடுக்க வேண்டும். ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
ஏனென்றால்., நல்லெண்ணெய் சனிபகவானின் அம்சம். வெள்ளிக்கிழமை பெண்கள் நல்லெண்ணெய்க் குளியல் எடுப்பது அவர்களுக்குள் உள்ள சோம்பல், தரித்திரம், அவநம்பிக்கை, அவச்சொல் போன்றவை நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் வலிமை உண்டாகும், உடல்வலிமை உண்டாவதால் பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும். கடின உழைப்பிற்கு சனிபகவானே காரகன்.
ஆனால்., ஆண்கள் சனிக்கிழமை அன்று பிறந்திருந்தால், சனிக்கிழமையை எண்ணெய் வைப்பதை தவிர்த்து, புதன்கிழமை அன்று எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
ஏனென்றால்… ஜென்ம கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. ஆனால், இது பெண்களுக்கு பொருந்தாது.