கும்பம்
குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனம் சிறு சிறு தொந்தரவு தரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். எனினும், தாயாரின் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் தேவை. சிலருக்கு வீட்டுப் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். மொத்தத்தில், நன்மை தீமை கலந்து நடக்கும் நாள்.