கன்னி
திடீர் செலவுகள் கையிருப்பை குறைக்கும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.