மேஷம்
கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போகலாம். வேலைச்சுமையால் சோர்வு அடைய நேரிடலாம். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
