மகரம்
சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அதனால் கையிருப்பு குறையலாம். வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம். மற்றபடி, உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவுகள் வரும். உத்தியோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
