மீனம்
சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், வாடிக்கையாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும்.