ஆன்மீகம்ஜோதிடம்

இந்த நாளில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்!!

நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு அவசியம் என்பதை உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது. ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்கு பயன்படுகிறது என்பதை பார்த்தால் வியப்பாக இருக்கும்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக உப்பு சொல்லப்படுவதால் தான் உப்பைச் சிந்தக்கூடாது. உப்பை காலில் மிதிக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

உப்பை கடனாக கொடுக்கக்கூடாது என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால் அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம்.

திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பிறந்த குழந்தைக்கு சர்க்கரை, உப்பு தண்ணீர் ஊற்றுவது தொடங்கி இறந்த உடலை பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது.

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் கிடைக்கிறது. அதனை வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.

எனவே தான் கிரகப்பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும். அந்த நாளில் லட்சுமிக்கு அம்சமாக விளங்கும் உப்பை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும். அதனால் உப்பை கல் உப்பாக வாங்கி வீட்டில் வைத்திருப்பது நல்லது.

வீட்டில் பணவரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 மணி முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 மணி முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வர வேண்டும்.

இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!