ஆன்மீகம்ஜோதிடம்

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பது எப்படி?

சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை (துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்).

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர்.

சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல நோய்களும் நீங்குகின்றன.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

பின் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி வலம்வர வேண்டும்.

விநாயகருக்கு பிடித்த பிரசாதங்களை நெய்வேத்தியாக படைத்து வழிபட வேண்டும்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும்.

விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

பலன்கள் :

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்தால் ஒரு வருடம் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணத்திற்காக காத்திருப்போர் இந்த விரதம் இருந்தால் திருமணம் நடக்கும்.

இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy five = seventy six

Back to top button
error: