Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

ஆன்மீகம்

பழனி மலை முருகன் சிலை தனி மகத்துவம் பெற்றது ஏன் தெரியுமா..?

20230606 153508

புராதானக் காலத் துவக்கத்தில் இருந்தே சித்தர்களும் முனிவர்களும் பழனி மலை மீது தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் புனிதத்தன்மை அடைந்தது.

தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் ஒப்பிடும் பொழுது அவற்றில் இருந்து பலவற்றிலும் வேறுபட்டு உள்ளது.

Advertisement. Scroll to continue reading.

சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ உருவங்களை கறுங்கல் பாறைகளில் செதுக்குவார்கள். ஆனால் அப்படி இல்லாமல் பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.

சமஸ்கிருதத்தில் நவ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நவ என்றால் புதியது அல்லது ஒன்பது என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. அதுபோலவே பாஷம் என்றால் விஷம் அல்லது தாதுப் பொருட்கள் என்ற இரண்டு அர்த்தம் கொண்டது.

Advertisement. Scroll to continue reading.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதில் இருந்தே சித்த முனிவர் போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல தொலை தூரக் கண்ணோட்டத்தில் பின்னர் வர உள்ள காலங்களில் தோன்ற இருக்கும் முருக பக்தர்களுடைய உடல் நலனில் அளவுக்கு மீறிய நாட்டம் கொண்டு இருந்தார் எனவும் மிக உயர்வான தெய்வ நிலையை பெற்று இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.

முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசை போல செய்து அதை சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது அற்புதமான வேறொரு மருத்துவ குணம் கொண்டதாக வியாதிகளைத் தீர்க்கும் முறையில் அமைந்து விடுவதினால் அதன் மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோய்களும் விலகுகின்றன. அதற்கு விஞ்ஞான காரணம் உள்ளது.

Advertisement. Scroll to continue reading.

பழனியில் உள்ள முருகன் சிலையோ மெல்லியதாகவும் மொட்டைத் தலையுடன் மெல்லிய காவி உடை அணிந்தபடியும் சாமியார் போன்ற தோற்றத்திலும் கையில் தண்டாயுதத்தை ஏந்திக் கொண்டும் மேற்கு நோக்கி பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: