கிருஷ்ணனின் பல பெயர்களுக்கான அர்த்தங்கள் தெரியுமா?

 

கிருஷ்ணன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். கிருஷ்ணன் என்ற ஒரு பெயரை மட்டும் அழைப்பது அல்ல! மாதவா கேசவா போன்ற பலப் பெயர்களில் கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார். இங்கே காணலாம் வாருங்கள் கிருஷ்ணருக்கு வழங்கும் பெயர்களுக்கான காரணங்களை…

மகா பாரதத்தின் உத்தியோக பருவத்தில் திருராட்டிரன் சஞ்சயனிடம், கிருஷ்ணனின் பெயர்களையும் அவர் அப்படி அழைப்பதற்கான காரணங்களையும் அறியக் கேட்கிறார். அதற்கு சஞ்சயன் கூறிய பதில்களையும் நாம் அழைக்கும் கிருஷ்ணனின் பெயர்களுக்கான காரணங்களையும் இங்கே காணலாம்.

 

கிருஷ்ணன்: சாத்வத குலத்தில் பிறந்து ஏற்கனவே இருக்கிறது என்பதாலும் ‘கிருஷி’ என்றும் நித்திய அமைதி என்பதைக் குறிக்கும் ‘ண’ என்பதாலும் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான்.

விஷ்ணு: கிருஷ்ணன் தனது மனதால் எங்கும் நிறைந்திருப்பதால் விஷ்ணு என்று அழைக்கப்படுகின்றான்.

 

கேசவன்: கிருஷ்ணன் அளவிடப் பட முடியாதவனாக இருப்பதாலும் பேச்சின் சக்தியை விவரிக்கபட முடியாதவனாகவும் இருப்பதாலும் கேசவன் என்று அழைக்கப்படுகிறான்.

வாசுதேவன்: கிருஷ்ணன் எல்லா உயிர்களையும் தனது மாய வித்தையால் கவருபவனாகவும் அவனின் பிரகாசமான ஒளியாலும் தேவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால் வாசுதேவன் என்று அழைக்கப்படுகிறான்.

 

மாதவன்: கிருஷ்ணன் யோக நிலையில் மூழ்கி பெரும் தவம் செய்திருப்பவனாக இருப்பதால் மாதவன் என்று அழைக்கப்படுகிறான்.

ஜனார்த்தனன்: தீயோரின் மனதில் பயத்தை ஏற்படுத்துவதால் ஜானர்த்தனன் என்று அழைக்கப்படுகிறான் கிருஷ்ணன்.

சாத்வன்: சத்வ குணம் ( சாத்விகம் ) கொண்டவன் என்பதாலும் அதை ஒரு போதும் விடாமல் இருப்பதாலும் சாத்வன் என்று அழைக்கப்படுகிறான் கிருஷ்ணன்.

அஜா: எந்த உயிர்களில் இருந்து தனது சாதரண பிறப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதால் கிருஷ்ணனை அஜா என்றும் அழைப்பதுண்டு.

தாமோதிரன்: தேவர்களைப் போல் இல்லாமல் தனக்கென தனிப் பிரகாசத்தை கிருஷ்ணன் கொண்டுள்ளதால் தாமோதிரன் என்று அழைக்கப்படுகிறான்.

மதுசூதனன்: அசுரன் மதுவைக் கொன்றதாலும் அறிவை விளக்கும் 24 நான்கு போதனைகளை உரைப்பதாலும் மது சூதனன் என்று அழைக்கப்படுகிறான்.

ரிஷிகேசன்: நித்திய பண்புகளான அமைதி, மகிழ்ச்சி, ஆன்மிகம் போன்றவை அவனுள் அடங்குவதால் ரிஷிகேசன் என்று கிருஷ்ணன் அழைக்கப்படுகிறான்.

கோவிந்தன்: கோவர்த்தன மலையை தனது சுண்டு விரலால் தூக்கி பிரிந்தாவன மக்களை காத்து நின்றதால் கோவிந்தன் என்று கிருஷ்ணன் அழைப்படுகிறான்.

கோபாலன்: தனது சிறு வயது முதல் பசுக்களை தனது உடன்பிறப்புகளாக எண்ணி வளர்த்ததால் கோபாலன் என்று அழைப்படுகிறான் கிருஷ்ணன்.

புருஷோத்தமன்: அனைத்தையும் படைத்து அதைக் காத்து வருபவனாக இருப்பதால் புரு என்பதிலிருந்து புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான்.

சர்வன்: அனைத்துப் பொருட்களின் அறிவை கிருஷ்ணன் பெற்றிருப்பதாலும் சர்வத்தையும் அறிந்து இருப்பதாலும் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.

இன்னும் பலப் பல பெயர்களில் கிருஷ்ணன் அழைப்படுகிறான். அவற்றை அடுத்தடுத்தப் பகுதிகளில் காணலாம்.

 
Exit mobile version