தமிழ்நாடுமாவட்டம்

கால்வாயில் கவிழ்ந்த சரக்கு வாகனம்.. கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் பலி..

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கால்வாயில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில் விவசாய வேலைக்காக கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மணக்காடு – மணப்படை ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து மணியாச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!