இந்தியா

ஆந்திரா அருகே லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து.. பரிதாபமாக 14 பேர் பலி..

ஆந்திராவின் கர்னூல் அருகே லாரி மீது வேன் மோதிய பயங்கர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து ஒரு வேன் மூலம் சிலர் கர்னூல் நோக்கி சென்றிருந்தனர். கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடப்புரம் என்ற இடத்தை அடைந்தபோது, ஒரு லாரி மீது வேன் மோதியது. இந்த பயங்கர விபத்தில் மினி பேருந்து பயணம் செய்தவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் பெண்கள். ஒரு குழந்தையும் விபத்தில் உயிரிழந்தது.

மினி பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்ததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!