உலகம்

விபத்துக்குள்ளான மெக்ஸிகோ விமானப்படையின் குட்டி விமானம்.. பரிதாபமாக 6 பேர் உயிரிழப்பு..

மெக்‍ஸிகோ விமானப்படைக்‍கு சொந்தமான குட்டி விமானம் விபத்துக்‍குள்ளானதில், 6 பேர் உயிரிழந்தனர்.

மெக்‍ஸிகோவின் El Lencero என்ற விமான நிலையத்தில் இருந்து LearJet 45 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றபோது, Emiliano Zapata என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து மெக்‍சிகோ அரசு தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், நைஜீரியா நாட்டு விமானப்படைக்‍கு சொந்தமான King Air 350 என்ற பயணிகள் விமானம், Abuja விமானநிலையத்தில் புறப்பட்டுச் சென்றது. அப்போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விழுந்து விபத்துக்‍குள்ளானது. இதில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Back to top button
error: Content is protected !!