இந்தியா

விவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டு, பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறையாக மாறியது.

சில விவசாயிகள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, தங்களது அமைப்பின் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதனால், போலீஸார்- விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. டிராக்டர் பேரணியின்போது ஒருவர் உயிரிழந்தார். வன்முறை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் டிராக்டர் பேரணியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய விவசாயிகள், ஏற்கனவே போராட்டம் நடத்திய எல்லைப் பகுதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டன. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!